மருத்துவ பரிசோதனை செய்ய இதுவரை 137 பேரை தனிமைப் படுத்தியது கடலூர் மாவட்ட நிர்வாகம்
" alt="" aria-hidden="true" />
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த ஜெயப்பிரியா வித்யாலயா தனியார் பள்ளியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு.வெ. அன்புச்செல்வன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீ.அபினவ் அவர்கள் ஆய்வு செய்தனர்.
வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் திருமதி. கமலா அவர்களின் தலைமையில் 01/05/2020 நேற்று சென்னையிலிருந்து வந்தவர்களை மருத்துவ பரிசோதனைக்காக தனிமை படுத்தும் பணி வேப்பூர் அருகாமையிலுள்ள திருப்பெயர் மெயின் ரோட்டில் தனியார் பள்ளியில் நேற்று இரவு சுமார் 30க்கும் மேற்பட்டோர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இன்று 02/05/2020 காலையில் மேலும் சுமார் 80க்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து வந்தவர்கள் தாமாகவே இப்பள்ளிக்கு வந்தனர். மருத்துவ பரிசோதனைக்காக
இதுவரையிலும் மொத்தமாக இதுவரை 137 பேர் தனிமைப் படுத்தப் பட்டுள்ள னர்.
வேப்பூர் தாலுகாவிலுள்ள அனைத்து பொதுமக்களும் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் கட்டாயம் அணியவேண்டும் அடுத்தவரிடம் பேசும் போது குறைந்தது ஒரு மீட்டர் அளவில் இடைவெளியை கடைபிடிக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அதுமட்டுமின்றி இ-பாஸ் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் மீது காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை வேப்பூர் காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே பொதுமக்கள் அச்சமின்றி அவரவர்கள் வீட்டில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதனால் வேப்பூர் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.